விவசாயிகள் கவனத்திற்கு... மிக குறைந்த விலையில் தென்னங்கன்று... அரசு சார்பில் விற்பனை
தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் பண்ணைகளில், பாரம்பரிய தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடி விற்பனை மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம் தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் பண்ணைகளில், பாரம்பரிய தென்னை இரகமான அரசம்பட்டி நெட்டை மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய நெட்டை x குட்டை (இளநீர் (ம) கொப்பரை பயன்பாடு) தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடி விற்பனை மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பருவமழை காலம் தொடங்கிய நிலையில், விவசாயிகள் பயன் பெறும் வகையில் அரசு தென்னை நாற்றுப் பண்ணை டேனிஷ்பேட்டையில் 65,000 எண்கள் (நெட்டை) மற்றும் 14,500 எண்கள் (நெட்டை x குட்டை) இரகமும், மாபெரும் பழப்பண்ணை கருமந்துறையில் 13000 எண்கள் நெட்டை இரகமும், அரசு தோட்டக்கலை பண்ணை கருமந்துறையில் 12000 எண்கள் நெட்டை இரகமும், அரசு தோட்டக்கலை பண்ணை மணியார்குண்டத்தில் 23000 எண்கள் நெட்டை இரகமும் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
நெட்டை இரகம் ரூ.65 (ம) நெட்டை x குட்டை இரகம் ரூ.125 க்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் பண்ணை மேலாளரை நேரில் அணுகியோ (அ) 93841 25705, 86751 73909 எண்ணை தொடர்பு கொண்டோ பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.