வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் தேர்தல் ; வேட்பாளரை அறிவித்த இந்தியா கூட்டணி!!
மக்களவையில், துணைசபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மக்களவை சபாநயகர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, கே.சுரேஷ் என்பவரை எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நிலையில், 1951ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் சபாநாயகராக ஜி.வி.மவளங்கர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது வரை 17 பேர் மக்களவை சபாநாயகர்களாக பதவி வகித்துள்ளனர். 2009ம் ஆண்டு மீரா குமார் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றிருந்தார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.க 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால், பா.ஜ.க பீகாரின் நித்தீஷ்குமார், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யும் தேர்தல் குறித்து பேசப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை அனைத்து சபாநாயகர்களும் மக்களவையில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மக்களவை சபாநாயகர் பதவிக்கு என்.டி.ஏ கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓ.பிர்லா நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சிகள் சார்பில், மக்களவை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் கே.சுரேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். சபாநாயர்கர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more ; ’பயணிகளே’..!! ’ரயிலில் இனி நிம்மதியா தூங்கலாம்’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..!!