For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிஜிட்டல் உலகிலும் மவுசு குறையாத டிவி!. இன்று உலகத் தொலைக்காட்சி தினம்!. சுவாரஸ்ய தகவல்!

In the digital world, there is no shortage of TV! Today is World Television Day! Interesting information!
08:15 AM Nov 21, 2024 IST | Kokila
டிஜிட்டல் உலகிலும் மவுசு குறையாத டிவி   இன்று உலகத் தொலைக்காட்சி தினம்   சுவாரஸ்ய தகவல்
Advertisement

டிஜிட்டல் மீடியாக்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும்கூட தொலைக்காட்சிகளுக்கான மவுசு இன்னும் குறையவே இல்லை. தொலைக்காட்சி இல்லாத வீடுகள் அரிது. அரசே இலவசமாக தொலைக்காட்சி வழங்கும் அளவுக்கு அதன் அத்தியாவசியம் விரிவடைந்திருக்கிறது. பொழுதுபோக்கு முதல் பயனுள்ள செய்திகள் வரை காட்சி அனுபவத்தில் நம்மை தொலைக்காட்சிகள் கட்டிப்போடக் கூடியவை.

Advertisement

இல்லங்களில் தொலைக்காட்சியை ரசிக்காதவர்கள் குறைவு. ரிமோட் கன்ட்ரோலுக்கு சண்டைகள் எல்லாம் நடக்கும். குழந்தைப் பருவத்தினரின் கார்ட்டூன் ரகங்களில் தொடங்கி, இளம் வயதினரின் இசை மற்றும் விளையாட்டில் வளர்ந்து, பெரியவர்கள் பார்க்கும் மெகா சீரியல் அல்லது செய்தி சேனல்கள் வரை சகலமானோரையும் தொலைக்காட்சிகள் திருப்தி செய்யக்கூடியவை.

ஐக்கிய நாடுகள் சபையால் 1996 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 21ஆம் தேதி உலகத் தொலைக்காட்சி தினமாக அங்கீகரிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சமூகத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

நமது ஒட்டுமொத்த வாழ்விலும் நிரம்பி வழிவது தொலைக்காட்சிகளின் பிம்பங்கள்தான். செய்திகள், பொழுதுபோக்கு, திரைப்படங்கள், கல்வி, இசை, விளையாட்டு என எல்லாமும் தொலைக்காட்சிகளின் வழியேதான் நம்மை அடைகின்றன. 90 களின் இறுதியில்தான் தமிழகத்தின் கிராமங்களையெல்லாம் தொலைக்காட்சிகள் தொட ஆரம்பித்தன.

அந்த காலகட்டத்தில் தூர்தர்சன் அலைவரிசை மட்டும்தான், அதற்கும் ஆண்ட்டனாவை அங்குமிங்குமாக திருப்பியபடியே இருக்க வேண்டும். ஒளியும் ஒலியும், சக்திமான், மகாபாரதம், ராமாயணம் என தூர்தர்சனின் ஆஸ்தான தொடர்களும், சச்சின் டெண்டுல்கர், அசார், தோனி, ஜடேஜா, கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் ஜாலம் செய்யும் கிரிக்கெட்டும் இன்னமும் அந்த காலத்தை கடந்தவர்களால் மறக்கவே முடியாது.

இப்போதைய பொது குடிநீர் தொட்டிகளைப் போல, அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரின் மையத்திலும் பொது தொலைக்காட்சி பெட்டியும், அதற்கு என பிரத்யேகமான அறையும், அதனை இயக்குவதற்கு ஒரு ஆபரேட்டரும் இருப்பார்கள். அவர்கள்தான் மாலைப்பொழுதுகளில் தூர்தர்சன் மட்டுமே ஒளிபரப்பாகும் இந்த தொலைக்காட்சியை ஆன் செய்வார்கள், செய்திகள், பொழுதுபோக்கு, விளையாட்டு என அனைத்திற்குமே அந்த தொலைக்காட்சிதான். பொது தொலைக்காட்சி பெட்டி அறையின் முன்னே மாலைப்பொழுதுகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படித்தான் தமிழகத்தில், 90 களில் தொலைக்காட்சி அறிமுகமானது.

கதவுகள் வைத்த கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி, பெட்டி போன்ற தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சிகள்தான் ஆரம்பம். சாலிடர், பிபிஎல் போன்ற நிறுவனங்கள்தான் அப்போது பிரபலமான நிறுவனங்கள். 2000 ஆண்டிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் ஆக்கிரமிக்க தொடங்கின. அப்போது தனியார் தொலைக்காட்சிகளும், கேபிள்களும் கிராமங்களை எட்ட தொடங்கி விட்டன.

2006 ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியது. அது அனைத்து வீடுகளுக்கும் தொலைக்காட்சி பெட்டியை கொண்டு சேர்த்தது. பின்னர் பிளாஸ்மா டிவி, எல்சிடி டிவி, எல்இடி என பலவகை தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. ஆண்டனா, கேபிள் தொடங்கி தற்போது டிடிஎச்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தொலைக்காட்சி சேவைகளை வழங்குகிறது.

தூர்தர்சன் பொதிகை மட்டுமே என இருந்த அலைவரிசை, தற்போது நூற்றுக்கணக்காக மாறிவிட்டன. தமிழிலும் உலகத்தரத்தில் 24*7 செய்தி தொலைக்காட்சிகள், இசை, பொழுதுபோக்கு, திரைப்படங்கள், காமெடி, விளையாட்டு, குழந்தைகள் உள்ளிட்ட பல வகை தொலைக்காட்சிகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

டிஜிட்டல் மீடியாக்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும்கூட தொலைக்காட்சிகளுக்கான மவுசு இன்னும் குறையவே இல்லை. மக்களின் நம்பிக்கைக்குரிய தகவல் சாதனமாக தொலைக்காட்சிகள் இருப்பதே அதற்கான காரணம். இந்தியாவில் உள்ள சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் 90 முதல் 95 சதவீத குடும்பங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன.

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஃபிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் II என்ற 21 வயது இளைஞனால் அந்த கால தொலைக்காட்சி வடிவமைக்கப்பட்டது, ஆனால் 1922இல்தான் ஜான் லோகி பேர்ட் என்ற ஸ்காட்டிஸ் பொறியாளர் முழுமையான தொலைக்காட்சியை வடிவமைத்தார். 1920 களுக்கு பின்னர் ஆய்வு ரீதியாக உலகின் பல இடங்களில் தொலைக்காட்சிகள் பயன்பாட்டுக்கு வந்தன. அதன்பின்னர் 1940 களில் உலகப்போர் செய்திகள் பலவற்றை தெரிந்துகொள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளில் தொலைக்காட்சிகள் பயன்பாட்டுக்கு வந்தன. 1950 களின் பெரும்பாலான உலக நாடுகளில் தொலைக்காட்சிகள் அறிமுகமானது.

இந்தியாவில் 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று ஒரு பரிசோதனை முயற்சியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது. அப்போது ஒரு வாரத்திற்கு இரண்டு மணிநேரம் மட்டுமே தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பானது. ஆரம்பத்தில் தொலைக்காட்சிகள் அகில இந்திய வானொலி நிலையத்தின் AIR (All India Radio) ஒரு பிரிவாகவே இருந்தன.

இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியான தினசரி ஒளிபரப்பு 1965 இல் தொடங்கியது, அப்போது தினசரி ஒரு மணிநேர சேவை தொடங்கியது.1970களில் நாட்டின் பிற பகுதிகளிலும் தொலைக்காட்சி மையங்கள் திறக்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டு அதுவரை அகில இந்திய வானொலியின் தொலைக்காட்சிப் பிரிவாக இருந்த தூர்தர்ஷன் தனித் துறையாக மாறியது. அதன்பின்னர் 1982 இல், தூர்தர்ஷன் INSAT LA செயற்கைக்கோளைப் பயன்படுத்தி 9வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பியது. அதன்பிறகு தொலைக்காட்சி வசதிகள் வேகமாக விரிவடைந்தன.

Readmore: உலகில் இப்படியொரு மர்ம இடமா?. ஈர்ப்பு விசையே இல்லையாம்!. சுவரில் நாற்காலி வைத்து அமரும் மக்கள்!. எதிர் திசையில் பாயும் நீர்!

Tags :
Advertisement