For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிரடி உத்தரவு...! வரும் கல்வி ஆண்டில், 75 % பயிற்சியை ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும்...!

06:20 AM Feb 11, 2024 IST | 1newsnationuser2
அதிரடி உத்தரவு     வரும் கல்வி ஆண்டில்  75   பயிற்சியை ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும்
Advertisement

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சி அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்த பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சியானது, மாவட்ட, மாநில அளவில் சில பயிற்சி மையங்களில் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. பயிற்சி பெறுவோர், உணவு, உறைவிட வசதிகளுக்காக, மையங்களில் இருந்து நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது.

பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் செல்வதால், பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. எனவே, இனி நேரடி பயிற்சி வழங்காமல், அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்தப்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டில், 75 சதவீத பயிற்சிகளை, ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement