For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வருட கடைசியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பாமர மக்கள்..!! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..?

In Chennai today (December 31) the price of jewelery gold has decreased.
09:48 AM Dec 31, 2024 IST | Mari Thangam
வருட கடைசியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை   மகிழ்ச்சியில் பாமர மக்கள்     ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா
Advertisement

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

Advertisement

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (டிசம்பர் 31) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் குறைந்து 7,110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் குறைந்து 56,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2000 குறைந்து ரூ.98,000 க்கு விற்பனை செய்யப்படுகிரது.

Read more ; கேன்சரை தொடர்ந்து எய்ட்ஸ்க்கும் தடுப்பூசி வந்தாச்சு..!! இந்தியாவில் கிடைக்குமா..?

Tags :
Advertisement