ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 உயர்வு..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!!
இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையும் குறைந்து காணப்பட்டது. கடந்த மாதம் மட்டும் ரூ.5,000 வரை தங்கம் விலையும் குறைந்தது. தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம் என்கிற வகையில், அடிக்கடி ஏற்றங்களை கண்டு வருகிறது. அந்தவகையில் இன்று தங்கம் விலை அதிரடி ஏற்றம் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் 6,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.92க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read more ; ‘நான் அதிபரானால்..’ போட்டிப்போட்டு வாக்குறுதிகளை குவிக்கும் ட்ரம்ப், கமலா ஹாரிஸ்..!!