புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணியிருக்கீங்களா? இந்த ஆவணம் இல்லையெனில் ரிஜெக்ட் தான்..
புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களுக்கு எப்போது கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இரண்டு முக்கிய சான்றுகளை கட்டாயமாக்கி உள்ளது. இந்த இரண்டு சான்றுகளையும் வைக்காத நூற்றுக்கணக்கானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் நிதி உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ரேஷன் கார்டு இருப்பது அவசியம். இதனால் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அரசு சில மாதங்களுக்கு ரேஷன் அட்டை வழங்கும் விநியோயகத்தை நிறுத்தி வைத்தது.
இந்த காரணத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பெயர் நீக்கல், பெயர் சேர்ப்புகளுக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் திருமணச் சான்றிதழ் கட்டாயமாக்கியுள்ளது. 2024-இல் விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது பரிசீலனையில் உள்ளது. அது மட்டும் அல்லாமல் திருமணமான புதிய தம்பதிகளும் திருமணச் சான்றிதழை கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.
இல்லையெனில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் சரியான ஆவணங்களை சமர்பிக்காமல் இருந்தாலும் புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த தகவலை பயன்படுத்தி முறையான சான்றிதழுடன் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பியுங்கள். இல்லையெனில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.