GOOGLE நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம்.!! ஐடி துறையில் 58,000 பேர் வேலை இழப்பு.!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!!
GOOGLE: உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் தற்போது மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரூத் போரட் மெமோ மூலம் தெரிவித்திருக்கிறார். ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் கடினமான முடிவுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நிதி அதிகாரி வெளியிட்ட மெமோ தெரிவித்திருக்கிறது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் ஜெயண்ட் கூகுள் தங்களது நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க மறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது பணியாளர்களின் பணி நீக்கத்திற்கு வழிவகுக்கும் என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மெமோவின் மூலம் தங்களது ஊழியர்களுக்கு அறிவித்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரூத் போரட் நிறுவன பணியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் மூலம் இந்த தகவலை தெரிவித்து இருப்பதாக சிஎன்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களது நிறுவனத்தின் திறமையான சகப் பணியாளர்கள் மற்றும் விருப்பமான நண்பர்களிடம் இருந்து விடை பெறுவது வருத்தமாக உள்ளது. இந்த மாற்றம் கடினமானது என்பதை நாங்கள் அறிவோம் என தங்களது மெமோவில் google தெரிவித்து இருக்கிறது. 2024 ஆம் வருடத்தில் கூகுள் நிறுவனத்தில் அதிக பணிநீக்கங்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் சரியான எண்ணிக்கையை கூகுள் குறிப்பிடவில்லை. எனினும் ஊழியர்களின் பணி நீக்கம் கூகுள் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் மறு சீரமைப்பு நடவடிக்கை ஆசியா-பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர், டப்ளின், மெக்சிகோ சிட்டி, அட்லாண்டா மற்றும் சிகாகோ போன்ற நகரங்களில் அதிக மையப்படுத்தப்பட்ட ஹப்களை நிறுவ கூகுள் உத்தேசித்துள்ளது.
கூகுளின் நடவடிக்கையானது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் போக்கை குறிக்கிறது. இது உலகளவில் பல்லாயிரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழி வகுக்கிறது. 2024ல் இதுவரை 58,000 தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.