நோட்...! பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! கட்டணம் செலுத்த 29-ம் தேதி தான் கடைசி நாள்…!
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து ( தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து ) தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று , அத்தொகையினை ஆன்லைன் வழியாக பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி 29.01.2024 பிற்பகல் 5.00 மணி வரை செலுத்தலாம். மேலும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டண விலக்கிற்கு தகுதியானவர்களில், செய்முறை கொண்ட பாடங்களடங்கிய பாடத் தொகுப்பில் பயில்வோருக்கு மொத்தக் கட்டணமாக ரூ.225, செய்முறை இல்லாத பாடங்களடங்கிய பாடத் தொகுப்பில் ரூ.175 முழுமையாக விலக்களிக்க வேண்டும். சுயநிதி / மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று +2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு பெறத் தகுதியுடையவர்கள் அல்லர்.
Arrear மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்துதல்; பள்ளித் தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் +2 பயிலும் பள்ளி மாணவர்கள், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வினை (1 Arrear Subjects தற்போது எழுதுவதற்கான தேர்வுக் கட்டணத் தொகையினை சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து பெற்று, அத்தொகையினை 29.012024 மாலை 5.00 வரையிலான நாட்களில் இவ்வலுவலக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைன் வழியாக செலுத்துதல் வேண்டும்.