முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”நான் தெரியாமத் தான் கேக்குறேன்”..!! ”மக்களை சந்திக்க எதுக்கு ப்ரோட்டோக்கால், செக்யூரிட்டி”..? விஜய்யை விளாசிய அண்ணாமலை

Tamil Nadu Victory Party leader Vijay will meet villagers protesting against the Parantur airport project today.
08:56 AM Jan 20, 2025 IST | Chella
Advertisement

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு 12 மணி முதல் 1 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.

Advertisement

முதல்முறையாக மக்களை விஜய் சந்திப்பதால், பலரின் கவனமும் அந்த சம்பவம் மீது திரும்பியுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விஜய் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இதுக்கே இப்படி இருந்தால், விஜய் அவர்கள் முதலமைச்சரான பின் மக்கள் எப்படி சென்று சந்திப்பார்கள். நான் தெரியாமத் தான் கேட்கிறேன். ஐயா காமராஜர் முதல்வராக இருந்தபோது, சாதாரணமாக செருப்பு அணிந்து கொண்டு மோகனூர் அருகில் அணையை கட்டி முடித்தார்.

இன்று ஒரு அரசியல் கட்சி தொடங்கியிருப்பவர் செல்வதற்கு ப்ரோட்டோக்கால், செக்யூரிட்டி, ஆயிரம் போலீஸ்.. எந்த மக்களை சந்திக்க போகிறீர்கள். அப்படி என்ன குறையை கேட்கப் போகிறீர்கள். மக்கள் சொல்லும் குறைகளை எப்படி அந்த கூட்டத்தில் நினைவு வைத்துக் கொள்ளப் போகிறீர்கள். ஒருவேளை எதிர்காலத்தில் எம்எல்ஏ, எம்பி ஆகிறீர்கள் என்றால், யார் வந்து உங்களை சந்திக்க முடியும்.

அரசியலில் இருப்பவர்கள் எளிமையாக நடந்து சென்று மக்களை பார்ப்பதை தான், இத்தனை காலமாக பார்க்கிறேன். முதல்முறையாக ப்ரோட்டோக்கால், செக்யூரிட்டி, கட்டுப்பாடுகள் என்ற அரசியலை புதுமையாக பார்க்கிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்ற செல்வப்பெருந்தகை கருத்து குறித்து, திராவிடக் கட்சியுடன் கூட்டணியில் உள்ள தலைவர் விஜயை அழைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் எந்த கட்சியெல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறதோ, அவர்கள் அனைவரும் விஜய்யை அழைக்கிறார்கள். எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று.. அண்ணன் செல்வப்பெருந்தகை விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கையை, ராகுல் காந்தி மீது வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Read More : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்த வெங்காயம், பூண்டு விலை..!! வெறும் 25 ரூபாய் தான்..!!

Tags :
annamalaiBJPPolicetvktvk vijay
Advertisement
Next Article