வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி..!! மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நோட்டீஸ்..!! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
ரூ.3 கோடி மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் ரூ.3 கோடி வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கில், வாக்குமூலத்தை மாற்றிச்சொல்லுமாறு தன்னை மிரட்டியதாக நல்லதம்பி என்பவர் மேல் விசாரணை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, 4 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More : போதைக்கு அடிமை..!! பெற்ற தாயின் கழுத்தை அறுத்த மகன்..!! ரத்த கரையை கழுவும்போது சிக்கிய சம்பவம்..!!