”நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”..!! பிளஸ் 2 மாணவியை நம்ப வைத்து பலாத்காரம்..!! உடற்கல்வி ஆசிரியரின் கேவலமான செயல்..!!
பெங்களூருவில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் நெலமங்களா டவுன் பகுதியில், தாபஸ்பேட்டையைச் சேர்ந்தவர் தாதா பீர். இவர், அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவியுடன் தாதா பீருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தனது பகுதியில் இருந்து அதே பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் தாதாபீருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தாதா பீர், மாணவியைக் காதலிப்பதாக கூறி அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது எனக்கூறி மாணவியை மிரட்டி வந்துள்ளார்.
பின்னர், நாளடைவில் தான் ஏமாற்றப்பட்டதை மாணவி உணர்ந்தார். இதனால், தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இச்சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தாபஸ்பேட்டை காவல் நிலையத்தில் தாதாபீர் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாதாபீரை தேடிய போது அவர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதனால், தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.
Read More : அடுத்த 25 ஆண்டுகளில் 40% குழந்தைகளுக்கு இந்த கண் பிரச்சனைகள் ஏற்படும்!. ஆய்வில் அதிர்ச்சி!