For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"நான் நாத்திகன்.. ஒவ்வொரு மீனவரிடமும் கடவுளைப் பார்க்கிறேன்.." உதயநிதி ஸ்டாலின் உருக்கம்.!

11:08 AM Jan 27, 2024 IST | 1newsnationuser7
 நான் நாத்திகன்   ஒவ்வொரு மீனவரிடமும் கடவுளைப் பார்க்கிறேன்    உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
Advertisement

கடந்த டிசம்பர் மாதம் சென்னை கடலூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயலின் கோரத்தாண்டவத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ள நீர் குடிநீர் பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து மீனவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பது மற்றும் அரசு வழங்கும் நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மீனவர்கள் சேவையாற்றினர். மீனவர்களின் தன்னலமற்ற இந்த சமூகப் பணியை பாராட்டும் வகையில் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பாக மீட்புப் பணிகளில் ஈடுபட்ட 1200 மீனவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீனவர்கள் கடவுள் போன்று உயிர்களை காப்பாற்றினார்கள் என நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு உதவினார்கள். அரசு வழங்கிய நிவாரண உதவிகள் பொதுமக்களை சென்றடைவதற்கு மீனவர்களின் உதவி இன்றியமையாததாக இருந்தது எனத் தெரிவித்தார். கடவுள்தான் உயிர்களை காப்பாற்றுவார் என்பது உண்மையாக இருந்தால் ஒவ்வொரு மீனவரிடத்திலும் நான் கடவுளை காண்கிறேன் என உருக்கமுடன் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக நிகழ்ச்சியில் பேசிய அவர் "மிக்ஜாம் புயலால் பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் மீனவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன் என்றாலும் ஒவ்வொரு மீனவர்களின் உருவத்திலும் கடவுளை காண்கிறேன். கடவுள் தான் உயிரை காப்பாற்றுவார் என்று சொல்வார்கள். அதேபோல ஒவ்வொரு மீனவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு மக்களின் உயிர்களை காப்பாற்றினார்கள் அவர்கள் இல்லை என்றால் அரசு வழங்கிய நிவாரண உதவிகள் பொதுமக்களை சென்றடைந்திருக்கும் என்று கூற முடியாது" என மனம் உருகி தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.

Tags :
Advertisement