முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு ஆட்கள்...! 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை...!

Illegal people abroad...! Action testing in more than 10 locations
06:32 AM Sep 27, 2024 IST | Vignesh
Advertisement

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்புவதை தடுக்க நடவடிக்கை.

Advertisement

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்புவதை தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாட்டிற்கான குடிபெயர்வோர் பாதுகாவலர், சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு முயற்சியில் 80-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 15 குழுக்களாக பிரிந்து, சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டு முயற்சியின் விளைவாக, சட்ட விரோத முகவர்கள் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்ட செல்போன்களும், லேப்-டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிமீறல்கள் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் வேலை தேடும் நபர்களை குறிவைத்து இந்த சட்ட விரோத முகவர்கள் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இந்த முகவர்கள், மிக அதிக அளவுக்கு பணம் பெற்று சில சமயங்களில் விசா மற்றும் பணி நியமன பர்மிட்டுகள் வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் சட்டப்பூர்வ உரிமம் பெறாமல், எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ இந்தியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடியாது என சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதற்கான உரிமம் பெற விரும்பும் முகவர்கள் சென்னையில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவலரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு குடிபெயர்வோர் பாதுகாவலரை 90421 49222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags :
airportChennaiForeign jobTamilanadu
Advertisement
Next Article