”உங்களை நான் கூட்டிட்டு போறேன்”..!! நைசாக பேசி பெண்ணை அழைத்துச் சென்று குடோனில் வைத்து கூட்டு பலாத்காரம்..!!
பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர். மார்க்கெட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பெண் ஒருவர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த நபரிடம் பேருந்து எப்போது வரும் என விசாரித்துள்ளார். அதற்கு அந்த நபர், நீங்கள் செல்லும் பேருந்து வேறு ஒரு இடத்தில் நிற்கிறது. நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த பெண்ணும், அவருடன் சென்றுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணை குடோன் இருக்கும் வீதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு, காத்துக் கொண்டிருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணிடம் இருந்த உடைமைகளையும் திருடி அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால், பயந்துபோன பெண், நடந்தவற்றை கூறி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, "ஒரு காலத்தில் கலாச்சாரமும், மதிப்புகள் மற்றும் பாதுகாப்புக்கு பெயர் பெற்றது கர்நாடகா.
ஆனால், இப்போது கொள்ளை மற்றும் குற்றச் சம்பவங்களின் மையமாக மாயிருக்கிறது. பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்திருப்பது கொடூரமான செயல். மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருவதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
Read More : பேரதிர்ச்சி..!! ரூ.60,000-ஐ தாண்டிய தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.600 உயர்வு..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!!