For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

IIT JAM 2024 நுழைவுத் தேர்விற்கான பதிவு ஏப்ரல் 29 வரை நீட்டிப்பு.!! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? முழு விவரம்.!!

02:59 PM Apr 26, 2024 IST | Mohisha
iit jam 2024 நுழைவுத் தேர்விற்கான பதிவு ஏப்ரல் 29 வரை நீட்டிப்பு    ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி   முழு விவரம்
Advertisement

IIT JAM 2024: ஐஐடி ஜாம் 2024 நுழைவுத் தேர்விற்கு பதிவு செய்வதற்கான செயல்முறையை ஏப்ரல் 29 வரை நீட்டித்திருப்பதாக இந்திய தொழில் நுட்பக் கழகம்(ஐஐடி) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்து இருக்கிறது.

Advertisement

ஜாம் 2024 தேர்விற்கு இன்னும் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். ஐஐடி ஜாம்(IIT JAM 2024) தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான jam.iitm.ac.in என்ற முகவரிக்கு சென்று தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கவும். ஐஐடி கல்வி நிறுவனத்தில் முதுகலை அல்லது பிஹெச்டி படிப்பை தொடர விரும்புபவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.JAM 2024 நுழைவுத் தேர்வு ஐஐடி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி, எம்.எஸ்சி (டெக்), ஒருங்கிணைந்த எம்.எஸ்சி-பி.எச்டி, எம்.எஸ்சி - எம்.டெக் டபுள் டிகிரி மற்றும் எம்.எஸ்சி பி.ஹெச்டி டபுள் டிகிரி போன்ற முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

JAM 2024 நுழைவுத் தேர்வு 21 ஐஐடிகளில் உள்ள 89 முதுகலைத் துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. ஐஐடி மெட்ராஸ் நடத்தும் இந்தத் தேர்வு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு முதுகலை மற்றும் டாக்டரேட் பட்டங்கள் பெறுவதற்கான ஒரு நுழைவாயிலாக அமைகிறது. இந்தத் தேர்விற்கு நுழைவுக் கட்டணமாக 750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தங்களது சீட்டிற்கு முன்பதிவு செய்ய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பொது பிரிவினர்/ஓபிசி-என்சிஎல்/ஈடபிள்யூஎஸ் ஆகியோருக்கு கட்டணமாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி மற்றும் பி.டபிள்யு.டி பிரிவினருக்கு கட்டணமாக ரூ.7,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி JAM 2024க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

jam.iitm.ac.in என்ற அதிகாரப்பூர்வ IIT JAM இணையதளத்தைப் ஓபன் செய்யவும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள 'JAM ஆன்லைன் விண்ணப்ப அமைப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.

புதிய பயனாளருக்கான பதிவை கிளிக் செய்யவும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

அவற்றில் கேட்கப்பட்டுள்ள அத்தியாவசியமான ஆவணங்களை பதிவேற்றவும்.

விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.

அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களை சரி பார்த்த பின் சப்மிட் என்பதை கிளிக் செய்யவும்.

எதிர்கால தேவைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Read More: KKR vs PBKS | மிட்செல் ஸ்டார்க் காயமடைந்தாரா? கேகேஆர் ஆல்ரவுண்டர் கொடுத்த முக்கிய அப்டேட்.!!

Tags :
Advertisement