For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

UPSC தேர்வில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு புறக்கணிப்பு...! எம்.பி குற்றச்சாட்டு

Ignoring reservation for SC, ST, OBC category in UPSC examination
10:18 AM Aug 18, 2024 IST | Vignesh
upsc தேர்வில் எஸ்சி  எஸ்டி  ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு புறக்கணிப்பு     எம் பி குற்றச்சாட்டு
Advertisement

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் UPSC.. திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி., எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள விளம்பரம் ஒரு சிறந்த உதாரணமாகும். பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர் / துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடும்போது, மொத்தமுள்ள 45 இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர், துணை செயலாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்சி /எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?

பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags :
Advertisement