”இவர்களை நம்பினால் கடைசியில் கிடைப்பது இருக்கடை அல்வா தான்”..!! 2026 தேர்தலில் தாமரைக்கு மறைமுக ஆதரவு..? பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்..!!
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாதக ஆகிய கட்சிகளுக்கு அடுப்படியாக விஜய்யின் அரசியல் வருகையும், இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனென்றால், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, தவாக, முஸ்லிம் லீக் உட்பட பல கட்சிகளும், அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளும், பாஜக கூட்டணியில் பாமக போன்ற கட்சிகளும் இருக்கின்றன. நாம் தமிழர் தனித்து களம் காண்கிறது.
இதற்கிடையே, விஜயின் அரசியல் பிரவேசம் மதவாத, ஊழல்வாத, பிளவுவாத அரசியல் கட்சிகளுக்கு எதிரானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் யாருடன் கூட்டணி அமைப்பார்..? அவரின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்..? என அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான், அரசியலில் நடிகர்களின் நிலை குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், முதலில் கமலின் நிலைமை குறித்து பதிவிட்டுள்ளார்.
நம்மவர் (கமல்ஹாசன்)
ஊழலை ஒழிக்க டார்ச் லைட்டுடன் வந்தார். ரிமோட்டை உடைத்தார். பிறகு பட வியாபாரத்திற்காக சிகப்பு பூதத்துடன் கை கோர்த்தார். கடைசியில் சூரியனுடன் ஐக்கியமாகி.. இப்போது ராஜ்யசபா சீட்டுக்காக காத்திருக்கிறார்.
தலீவர் (ரஜினிகாந்த்)
சிஸ்டம் சரியில்லை. ஆன்மீக அரசியல் மூலம் தமிழ்நாட்டை மீட்பேன் என்று துள்ளினார். பிறகு யூடர்ன் அடித்து பழையபடி ஷூட்டிங் சென்றுவிட்டார். தற்போது தமிழக அரசியலின் கிங் மேக்கராக தன்னை உணர்ந்து, கொல்லைப்புற அரசியல் செய்கிறார். 2026 தேர்தலில் தாமரைக்கு மறைமுகமாக உதவுவார்.
சங்கிமான் (சீமான்)
தமிழ்ப்பற்று முகமூடியை அணிந்து கொண்டு அக்மார்க் B டீம் அவதாரம் எடுத்துள்ளார். எப்போதோ எடுத்தும் விட்டார். சில வருடங்கள் கழித்து, பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்.பி. ஆகலாம் அல்லது அக்கட்சியின் மாநில தலைவராக கூட ஆகலாம்.
சுறா (விஜய்)
வந்தா மலை. போனா முடி என களத்திற்கு வந்துள்ளார். ஜெயித்தால் சி.எம். தோற்றால் மறுபடியும் உறுதியாக ஷூட்டிங் போய் விடுவார். தற்போதைக்கு லேசாக காவிச்சாய வாடை வருகிறது. ஆக மொத்தத்தில்.. இவர்கள் அனைவருமே செமத்தியாக செட்டில் ஆகத்தான் இத்தனை நாடகங்களும். இவர்களை நம்பி நேரம், பணம், எதிர்காலத்தை இழக்கும் ரசிகர்கள் தொண்டர்களுக்கு பட்டை நாமம் உறுதி.
சந்தேகம் இருந்தால் நம்மவர் மற்றும் தலீலரின் பக்தர்களுக்கு நேர்ந்த கதியை யோசித்துப் பாருங்கள். இவர்கள் திமுக, அதிமுகவை ஒழித்து.. நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என நம்பும் அப்பாவி மக்களுக்கு கிடைக்கப்போவது. இருட்டுக்கடை அல்வாதான்” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : ”புருஷன் நான் இருக்கும்போது வேற ஒருத்தவன் கூட”..!! செருப்பால் அடித்த மனைவி..!! பதிலுக்கு கத்தியை எடுத்து சொருகிய கணவன்..!!