” உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..” அஜித்தை வியந்து ரசிக்கும் ஷாலினி.. செம க்யூட் வீடியோ....
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாருக்கு கார், பைக் ரேஸ் என்றால் அலாதி பிரியம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் 2010-ம் ஆண்டுக்கு பிறகு கார் ரேஸ் பக்கம் செல்லாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அஜித் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கார் ரேஸில் பங்கேற்பதற்காக தனது உடல் எடையையும் குறைந்து பயங்கர ஃபிட்டாக மாறினார். கார் ரேஸ்-க்காக தீவிர பயிற்சியும் அஜித் எடுத்து வந்தார்.
இந்த சூழலில் துபாயில் நடைபெற்றும் வரும் 24H கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றார். அஜித்தின் கார் ரேஸ் போட்டியை அவரின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் நேரில் சென்று கண்டு களித்தனர். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கி கூடியதும், தனது ரசிகர்கள் பற்றி அஜித்குமார் பேசிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
24H கார் ரேஸ் என்பது 24 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெறும் கார் ரேஸ் ஆகும். ஒரு அணியில் 3 பேர் இருப்பார்கள். 3 பேரும் தலா 6 மணி நேரம் தொடர்ச்சியாக கார் ஓட்ட வேண்டும். இந்த போட்டி நேற்று நிறைவடைந்த நிலையில் இதில் அஜித்தின் அணி 3-வது பரிசை வென்றுள்ளது.
அவர் வெற்றி பெற்றதற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அஜித்தின் ரசிகர்கள் அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் வெற்றி பெற்று திரும்பிய உடன் ஷாலினிக்கு முத்தம் கொடுத்து கட்டிபிடிக்கும் அஜித், மகள் அனோஷ்காவிற்கு முத்தம் கொடுக்கிறார். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவரும் நன்றி தெரிவிக்கிறார். அப்போது தனது கணவர் அஜித்தை ஷாலினி வியந்து ரசித்து பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அஜித் - ஷாலினி நடிப்பில் வெளியான அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு பாடலையும் எடிட் செய்து இந்த வீடியோவுக்கு போட்டுள்ளனர். பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read More : வெற்றி.. 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸிஸ்.. கப்பை தட்டித்தூக்கிய அஜித்..!! – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..