கூகுளில் இந்த விஷயங்களை தேடினால் சிறை தான்.. என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!
கூகுள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகிவிட்டது. யாராவது ஏதாவது கேட்க அல்லது கற்றுக்கொள்ள விரும்பினால், அந்த நபர் உடனடியாக Google –ல் தேடுவார். இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் இந்த தேடுபொறியான கூகுளில் சில விஷயங்களை தேடுவது உங்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும். இந்த சூழ்நிலையிலும் நீங்கள் சிறைக்கு செல்லலாம். கூகுளில் தேடுவதைத் தவிர்க்க வேண்டிய விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெடிகுண்டு தயாரிக்கும் தகவலை தேடுவது குற்றம் : வெடிகுண்டு தயாரிப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பது சட்டப்படி குற்றம். இதை பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. நீங்கள் இதைச் செய்தால், பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரில் உங்கள் கம்ப்யூட்டர் சென்றுவிடும். உங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி, தேவைப்பட்டால் உங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
குழந்தைகளின் ஆபாசப் படங்கள் : கூகுளில் ஆபாச தளங்களைப் பார்ப்பவர்கள் ஏராளம். ஆனால் குழந்தைகளின் ஆபாசங்கள் தொடர்பான விஷயங்களை நீங்கள் ஒருபோதும் தேடக்கூடாது. ஏனெனில் இந்தியாவில் இது தொடர்பாக சட்டம் உள்ளது. POCSO சட்டம் 2012, 14-ன் கீழ், குழந்தைகளின் ஆபாசத்தைப் பார்ப்பது, உருவாக்குவது மற்றும் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த விஷயத்தில் உங்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்காக 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவீர்கள்.
கருக்கலைப்பு : கருக்கலைப்பு என்று கூகுளில் தேடவே கூடாது. ஏனென்றால் இந்தியாவில் முறையான மருத்துவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தால் அது சட்டவிரோதமானது.
Read more ; உஷார்.. வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துறீங்களா..? இந்த பிரச்சனையெல்லாம் ஏற்படும்..!! – நிபுணர்கள் எச்சரிக்கை