For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ChatGPT உள்ளிட்ட OpenAI செயலிகள் செயலிழப்பு.. உலகளவில் சிக்கலை சந்தித்த பயனர்கள்..!! என்ன காரணம்..?

ChatGPT Down Today: OpenAI Server Faces Widespread Outage, Users Report Bad Gateway Error
06:58 PM Jan 23, 2025 IST | Mari Thangam
chatgpt உள்ளிட்ட openai செயலிகள் செயலிழப்பு   உலகளவில் சிக்கலை சந்தித்த பயனர்கள்     என்ன காரணம்
Advertisement

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட பிரபலமான AI சாட்போட் ChatGPT, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. இதனால் பயனர்கள் சேவையை அணுக முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும் OpenAI உருவாக்கிய ChatGPT, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பல்வேறு பணிகளுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த உலகளாவிய செயலிழப்பு, ChatGPT மட்டுமின்றி, OpenAI இன் API மற்றும் Sora வீடியோ ஜெனரேட்டர் தளங்களையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக, OpenAI இன் API ஐ நம்பி தங்கள் வணிகம் மற்றும் சேவைகளை நடத்தி வரும் பல நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளன.

மாலை 5:00 மணியளவில் இந்த தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல பயனர்கள் X பக்கத்தில் தங்கள் விரக்தியை பகிர்ந்து வருகின்றனர். ஒரு பயனர், ChatGPT செயலிழந்துவிட்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை…, AI சாட்போட் மீது நம்பிக்கை இப்போது குறைகிறது" என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், ChatGPT செயலிழந்துவிட்டது, ரோபோக்கள் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்துகின்றன.. என கேலியாக பதிவிட்டிருந்தார்.

OpenAI குழு விரைவில் இந்த சிக்கலைச் சரிசெய்யும் என்று பயனர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில், இதுபோன்ற தொழில்நுட்ப செயலிழப்புகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது.

Read more ; மாணவியை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!! வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் ஷாக்..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

Tags :
Advertisement