Ration Rice : ரேஷன் அரிசி சாப்பிட தயக்கமா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி விடவே மாட்டீங்க..
ரேஷன் அரிசி நம் உடலுக்கு அவ்வளவும் நல்லது.. இன்றுவரை அடித்தட்டுவர்க்க மக்களின் முழுநேர உணவாக காப்பாற்றி கொண்டிருக்கும் இந்த ரேஷன் அரிசியின் சிறப்புகள் அதிகம். ரேஷன் அரிசியை நிறைய பேர் தவிர்த்து வந்த நிலையில், இப்போது பெரும்பாலானோர் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ரேஷன் அரிசிக்கு எல்லா காலத்திலுமே மதிப்பு இருக்கவே செய்கிறது.
ரேஷன் அரிசியை சிலர் தவிர்க்க காரணம், அதிலுள்ள வாடைதான்.. அரிசி வாங்கியதுமே, நன்றாக சலித்து அதிலுள்ள தூசு, உமிகளை நீக்கி கொள்ள வேண்டும்.. சமைப்பற்கு முன்பு, ரேஷன் அரிசியை தண்ணீரில் கொதிக்க வைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அரிசியை களைந்தால், அதிலுள்ள வாசனை நீங்கவிடும். அதற்கு பிறகு சமைத்து சாப்பிடலாம்..
ஒருவேளை இந்த அரிசியில் சாதம் செய்து சாப்பிட பிடிக்கவில்லையானால், பொங்கல் செய்து சாப்பிடலாம். அல்லது இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, ஆப்பம் செய்து சாப்பிடலாம். சிலர் இந்த அரிசியில்தான் முறுக்கு சுடுவார்கள். 10 மணி நேரத்துக்கும் மேல் ஊறவைத்து அரைத்தால் இட்லி மாவு நன்றாக வரும்.. ரேஷன் அரிசி சாப்பாடு மீதமாகிவிட்டால், அடுத்தநாள் வரை தண்ணீர் ஊற்றவில்லை என்றால் கூட தாங்கும். ஆனால், மற்ற வகை அரிசி சாப்பாட்டில் அப்படியில்லை.
இந்த ரேஷன் அரிசியை சாப்பிடுவதால் வரும் பலன்கள் என்னென்னவென்று பார்த்தால், ஃபோர்டிஃபைட் ரேஷன் அரிசியில் துத்தநாகம், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் பல நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக பெண்களுக்கு ரத்த சோகை குறையும். இதில் குறைந்த கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவை உள்ளன. உடல் பருமன் மற்றும் தொடர்புடைய நோய்களைக் குறைக்கும்.
ரேஷன் அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், உடலுக்கு எரிபொருளாக செயல்பட்டு மூளை சீராக செயல்பட உதவுகிறது. உடல் கார்போஹைட்ரேட்டுகளை வளர்சிதைமாற்றம் செய்து பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றுகிறது. ரேஷன் அரிசியை விற்று பாலிஷ் செய்கின்றனர். இந்த அரிசியை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்கள் வருகின்றன. ரேஷன் அரிசியை தரகர்கள் பாலிஷ் செய்து விற்பனை செய்கிறார்கள்.
Read more ; அமரன் படம் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? இந்த தளத்தில் தான் வெளியாகிறது..