வீடுகளில் இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.! பண நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள்.!
ஒவ்வொருவரும் வீடு கட்டும்போது செல்வ வளம் பெருக வேண்டும் மற்றும் நேர்மறையான சிந்தனைகளும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என வாஸ்து சாஸ்திரப்படி வீடு அமைய வேண்டும் என பார்த்துக் கொள்வோம். மேலும் வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாகமும் வைத்திருப்போம். மேலும் நமது முன்னோர்களின் ஞாபகமாகவும் சில பொருள்களை வைத்திருப்போம். சில பொருட்களை வைத்திருந்தால் நம் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்று இருப்பது போல் சில பொருட்களை வைத்திருந்தால் பண நஷ்டம் ஏற்படும். அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.
நமது வீட்டில் முன்னோர்களின் ஞாபகமாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்திருப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அந்த பொருட்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். உடைந்த நிலையில் உள்ள பொருட்களை வைத்திருப்பதால் வீட்டில் செல்வம் தங்காது. காய்ந்த மற்றும் பட்டுப்போன செடிகளையும் வீடுகளில் வைத்திருக்கக் கூடாது அவற்றை உடனடியாக அகற்றி விட வேண்டும். வீடு அலுவலகம் மற்றும் பண்ணைகளில் காய்ந்த செடிகள் மற்றும் பட்டுப்போன செடிகள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். இந்தச் செடிகள் எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதோடு பண நஷ்டத்தையும் உருவாக்கும்.
மேலும் துருப்பிடித்த பழைய பொருட்கள் கிழிந்த துணி மற்றும் பழைய சாமான்கள் ஒன்றவை எதிர்மறை ஆற்றலை உருவாக்கக் கூடியதாகும். இவற்றை வீடுகளில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துவது மிகவும் நல்லது. உடைந்த பொருட்கள் எதுவாக இருப்பினும் கண்ணாடி பிளாஸ்டிக் மற்றும் பிற பொருள்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். இவை வீடுகளில் எதிர்மறை காரணிகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் வீடுகளில் செடிகள் வளர்க்கும் போது தலை கவிழ்ந்த நிலையில் கீழ்நோக்கி மலரும் பூக்களை கொண்ட செடிகளை வளர்க்கக்கூடாது இவை எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதோடு பண நஷ்டத்தையும் ஏற்படுத்தக் கூடியவை. மேலும் பிறரது பொறாமையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வெற்றிலையை காம்போடு தண்ணீர் பாட்டிலில் போட்டு வீட்டின் வரவேற்பு அறையில் வைக்க வேண்டும். இது பார்ப்பவர்களின் கண்கள் வெளிப்படுத்தும் பொறாமை மற்றும் கண் திருஷ்டி ஆகியவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.