உஷார்.... புதிதாக பரவும் Monkey pox வைரஸ்..! இந்த அறிகுறி எல்லாம் இருந்தால் உங்களுக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி…!
குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஆப்ரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவான அறிகுறிகள்: காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), நிணநீர் கணுக்கள் வீக்கம் தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகும்.
பாதிப்புகளின் அறிகுறிகள்: கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் ஆகும். அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்: ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், இணை நோய் பாதிப்புடையவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண் இவர்களுக்கு தான் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது.
பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: நீங்களோ அல்லது உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நோய் வாய் பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உதாரணமாக சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ அல்லது ஆல்கஹால் கலந்த கைசுத்திகரிப்பான்களை பயன்படுத்தியோ கழுவ வேண்டும்.