இந்த வெங்காயத்தை சாப்பிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்..!! இனியாவது உஷாரா இருங்க..!!
வெங்காயத் தோலை உரிக்கும் போது அதில் கருப்பு அச்சு இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வெங்காயம் தான் சமையலுக்கு அத்தியாவசியமானது. குறிப்பாக, வெங்காயத்தை வதக்கும் பக்குவத்திற்கு ஏற்ப அதை சுவையும் மாறுபடும். இப்படி சமையலில் ஒரு பக்கம் கலக்கி கொண்டிருந்தாலும், மறுபுறம் ஆரோக்கியத்திற்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. அதாவது, செரிமான ஆற்றலை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் இது உதவுகிறது.
இந்நிலையில், வெங்காயத் தோலின் மேல் கருப்பு அச்சு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்படி இருக்கும் வெங்காயத்தை சாப்பிடலாமா? என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே, வெங்காயத்தில் காணப்படும் இந்த கருப்பு அச்சு ஆஸ்பெர்கிலஸ் நைகர் என்று அழைக்கப்படுகிறது. இது மண்ணில் காணப்படும் ஒருவகையான பூஞ்சை ஆகும். இந்த கருப்பு அச்சு ஆபத்தானவை அல்ல. ஆனால், இது ஒரு வகையான நச்சுவை வெளியிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கருப்பு அச்சு கொண்ட வெங்காயம் உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்து இல்லை என்றாலும், ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் இந்த கருப்பு அச்சுக் கொண்ட வெங்காயத்தை சாப்பிடக்கூடாது. அதேபோல், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இதை நுகரும்போது அவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
Read More : கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிப்பு..!! அறிவித்தது யார் தெரியுமா..?