முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

UTS செயலியில் வந்தது அதிரடி மாற்றம்.. இத செய்யலன்னா உங்க டிக்கெட் கேன்சல்!!

06:58 PM Apr 30, 2024 IST | Mari Thangam
Advertisement

யுடிஎஸ் செயலி மூலம் ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கும் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் வீடு உள்பட எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து கொள்ள முடியும்.

Advertisement

பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்ல நடைமேடை டிக்கெட் என தொடங்கி  மெட்ரோ மற்றும் சீசன் டிக்கெட் போன்றவற்றை புக் செய்ய யூடிஎஸ் செயலியை பயன்படுத்தி வந்தனர். இதனை உபயோகிக்கும் பலரும் இதில் உள்ள ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடு மக்கள் உபயோகிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று புகார் அளித்தும் அத்தனை நீக்கும் படியும் வலியுறுத்தி வந்தனர்.

இதன் மீது கவனம் கொண்ட ரயில்வே நிர்வாகம், தற்பொழுது இந்த ஆப்ஷனை நீக்கி உள்ளது. முன்பு இந்த ஜியோ பென்சிங் இருந்ததால் குறுகிய எல்லைக்குள் இருக்கும் பொழுது மட்டும்தான் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். ஆனால் தற்பொழுது இந்த ஆப்ஷனை எடுத்து விட்டதால் பயணிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட் உள்ளிட்டவற்றை புக் செய்து கொள்ளலாம்.

அதாவது குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து தான் யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட ஒருவர் யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் ரயில் நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Indian railwayticket bookingUts app
Advertisement
Next Article