இதை மட்டும் செய்தால் பாத்ரூமில் கெட்ட வாடையே வராது..!! இந்த பொருட்கள் இருந்தால் போதும்..!!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியலறையும், கழிவறையும் துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாம் பயன்படுத்தும் குளியலறையில் துர்நாற்றம் வீச ஆரம்பித்தால், அது வீடு முழுவதும் பரவி, நம்மை பெரும் மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கும். ஒரு சில வீடுகளில் படுக்கையறையுடன் இணைந்தே குளியலறை இருக்கிறது. அப்போது துர்நாற்றம் வீசினால், இரவு முழுவதும் தூங்க முடியாது. அத்துடன், சுகாதாரம் கேள்விக்குறியாகி, குடும்ப உறுப்பினர்களின் உடல் நலமும் பாதிக்கப்படும். எனவே, இயற்கை வழிகளை கடைப்பிடித்தால் பலன் உறுதியாக கிடைக்கும்.
பேக்கிங் சோடா : துர்நாற்றத்தை அகற்றுவதற்கு ஓர் எளிமையான வழி பேக்கிங் சோடாதான். பேக்கிங் சோடா ஓர் இயற்கையான உறிஞ்சி என்பதோடு, கறைகளையும் எளிதில் அகற்றக் கூடியது. எனவே, குளிலறையில் சிறிது பேக்கிங் சோடாவை தூவி, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், ஏதாவது ஒரு டப்பாவில் சிறிது பேக்கிங் சோடாவைப் போட்டு, குளியலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்தால், ஒரு மாதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
கற்பூரம் : குளியலறையில் துர்நாற்றத்தை அகற்ற மிகச் சிறந்த வழி, கற்பூரத்தை பயன்படுத்துவதுதான். குளிலறையில் ஆங்காங்கே கற்பூரங்களை வைத்தால், துர்நாற்றம் அகலுவதோடு, நல்ல மணமும் வீசும்.
வினிகர் மற்றும் தண்ணீர் : குளியலறை அல்லது கழிவறையை சுத்தம் செய்யும்போது, தண்ணீருடன் வினிகரை சிறிது சேர்த்துக் கொண்டால், துர்நாற்றம் மற்றும் கறைகளை எளிதாக அகற்றலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது வினிகரையும் சேர்த்து, குளிலறையின் ஒரு மூளையில் வைத்தால், இரண்டு வாரங்களுக்கு உங்கள் குளியலறை வாசனையுடன் இருக்கும்.
வாசனை மெழுகுவர்த்திகள் : குளிலறையில் துர்நாற்றம் வீசும்போது, உங்களால் அதை சமாளிக்க முடியாது. எனவே, குளிலறைக்குள் நுழையும்போது, வாசனை மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். இதனால், 15 நிமிடங்களில் முழு இடமும் வாசனை மெழுகுவர்த்தியின் வாசனையால் நிரம்பி, அங்கிருந்த துர்நாற்றம் தெரியவே தெரியாது.
அடுப்புக்கரி : அடுப்புக்கரி எப்போதுமே அழுக்கு மற்றும் துர்நாற்றத்தை ஈர்க்கக் கூடியது. குளியலறையில் ஏதாவது ஓரிடத்தில் கரியை வைத்தால், துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும்.