”இனி இதை செய்தால் மட்டுமே கேஸ் சிலிண்டர் கிடைக்கும்”..!! ”வரப்போகும் புதிய மாற்றம்”..!! அமைச்சர் முக்கிய தகவல்..!!
வீடுகளுக்கு இனி கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாற போகிறது. தற்போதுள்ளது போல அல்லாமல் புதிய முறைப்படி இனி கேஸ் விற்பனை நடக்க உள்ளது. அதன்படி, திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்கள் விரைவில் க்யூஆர் குறியீடுகளுடன் வரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, சிலிண்டர்களில் இனி க்யூஆர் கோடு இருக்கும். இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் மட்டுமே சிலிண்டர் வாங்க முடியும். சிலிண்டர் திருட்டை தடுக்க இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோல் வீட்டு சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்துவதை தடுக்கவும் இம்முறை கொண்டு வரப்பட்டுள்ளது. க்யூஆர் கோடு காரணமாக, வீடுகளுக்கு இனி கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாற போகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான், ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கை ரேகை கொடுக்க இணைப்பு எடுத்த ஆட்கள் எப்போதும் வீட்டில் இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் கைரேகை கொடுக்க முடியாமல் போகலாம். இதன் காரணமாக மானியம் துண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால், ஆதார் சரிபார்ப்பிற்காக கைரேகை பதியாவிட்டாலும், கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கைரேகை எப்போதும் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், அது கட்டாயம் இல்லை. கைரேகை கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் என்பது தவறு என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Read More : குலதெய்வம் கனவில் வந்தால் என்ன அர்த்தம்..? என்னென்ன பலன்கள் கிடைக்கும்..? என்ன செய்ய வேண்டும்..?