For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திசை மாறி பணம் வைத்தால் காணாமல் போய்விடும்..!! பணம் வைக்க சரியான திசை இதுதான்..!!

In this post we will see which direction is right to put money
08:14 AM Jun 09, 2024 IST | Chella
திசை மாறி பணம் வைத்தால் காணாமல் போய்விடும்     பணம் வைக்க சரியான திசை இதுதான்
Advertisement

நாம் வசிக்கும் வீடு என்பது அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் நோய் நொடியின்றி வாழ முடியும். பணம் குறைவின்றி வரும். சிலரது வீட்டில் கடன்கள் அதிகமாகும் விரைய செலவுகள் ஏற்படும். இதற்குக் காரணம் வாஸ்து குறைபாடுதான். வீட்டின் மூலைப்பகுதி சரியாக அமைந்து அந்த மூலையில் சரியான பொருட்களை வைத்தால் செல்வம் பெருகும். அந்த வகையில், எந்த திசையில் பணம் வைப்பது சிறந்தது என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

வடக்கு திசையில் பணத்தை வைக்க முடியாதவர்கள் கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கிலும் செல்வம் பெருகுவதற்கான வாஸ்து சாஸ்திரம் உள்ளன. பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படம் அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும் என்று நம்பப்படுகிறது. தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்களது இருக்கையானது, வட மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அதேபோல் கிழக்கு திசையை நோக்கி இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக் கொள்வது சிறந்தது. பணம் வைப்பதற்கான மிகச்சரியான திசை என்றால் வடக்கு திசை தான். அறையின் 4 மூலைகளில் கட்டாயம் பணத்தை வைக்கக்கூடாது. அதாவது வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு போன்ற மூலைகளில் பணத்தை வைக்கக் கூடாது. பணம் வைப்பதற்கு தெற்கு திசையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பணம் வைத்திருக்கும் இடம் நுழைவு வாயிலை பார்த்தவாறு இருக்கக் கூடாது. வீட்டிற்குள் நுழையும் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்க வேண்டும். அதேபோல் பூஜை அறையில் சிலர் பணத்தை வைத்திருப்பார்கள். அப்படி செய்யக்கூடாது. பணம் வைத்திருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். பூச்சிகள் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தும் மணி பர்ஸிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருங்கள். பணம் என்பது நிலையான ஒரு பொருள் அல்ல. இன்று இருக்கும் நாளை இல்லாமல் போகும். மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சம்பாதிக்கும் பணம் வீண் போவதில்லை. ஈட்டிய செல்வத்தை நிலைக்குமாறு வழி செய்து கொள்ளுங்கள்.

Read More : கால்வாயில் திடீர் அடைப்பு..!! சுத்தம் செய்த மக்களை தூக்கிவாரிப்போட்ட சம்பவம்..!! நிர்வாண நிலையில் கர்ப்பிணி சடலம்..!!

Tags :
Advertisement