அலர்ட்!! இந்த அறிகுறிகள் இருந்தா அல்சர் இருக்குனு அர்த்தம்!
மற்ற நோய்களைப் போலவே அல்சருக்கும் சில ஆரம்ப கால அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றை உடல் வெளிப்படுத்தவும் செய்யும். அந்த அறிகுறிகள் என்னென்ன, அவற்றை எப்படி கண்டறிவது என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
அல்சர் என்பது திடீரென ஒரே நாளில் உண்டாகிற பிரச்சினையல்ல. குடலில் அதிகப்படியான அமில உற்பத்தியால் உண்டாகிறது. பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் இருக்கும் நாள்பட்ட தொற்றுக்களால் குடலின் சுவர்ப்பகுதி அமிலத்தால் அரிக்கப்பட்டு பலவீனமடையும். இதனால் ஒட்டுமொத்த குடல் இயக்கமும் பாதிக்கப்படுகிறது.
இந்த அமில உற்பத்திக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. போதிய நீர்ச்சத்து இல்லாமை, உணவுப் பழக்கம், ஆல்கஹால் எடுத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றின் தீவிரமான விளைவால் குடலில் அமில உற்பத்தி அதிகமாகி அல்சர் உண்டாகிறது. இதை தடுக்க அவற்றின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து சரிசெய்வதும் முக்கியம்.
அறிகுறிகள் :
அல்சர் பிரச்சினை உள்ளவர்களுக்கு அடிவயிற்றில் வலி உண்டாகும். வயிற்று வலிதான் அல்சரின் முதன்மையான அறிகுறிகளில் ஒன்றாகும். சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் மலம் கழிக்கும் உணர்வு, அவசர அவசரமான மலம் கழிக்கத் தூண்டுவது ஆகியவையும் அல்சரின் அறிகுறிகள். சிலருக்கு டயேரியா ஏற்படும்போது ரத்தமும் வெளியேறலாம். இவை எல்லாமே அல்சரின் தீவிர அறிகுறிகள் தான். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுகிறவர்களுக்கு எப்போதும் உடல் சோர்வாகவே உணர்வார்கள்.
வயிற்றில் அல்சர் ஏற்பட்டால் சிலருக்கு அதனால் உடல் எடை இழப்பு கூட உண்டாகும். குடலில் அல்சர் உண்டாகும்போது இயல்பாகவே பசியின்மை பிரச்சினை உண்டாகும். பசியின்மை, டயேரியா மற்றும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை குடல் உறிஞ்ச முடியமல் போவது ஆகியவற்றின் காரணமாக அல்சர் இருக்கும்போது எடை இழப்பு ஏற்படும். மேலும், குடலில் இன்ஃபிளமேஷன் தீவிரமடையும் போது, வைரஸ் தொற்றுக்கள் உருவாகி காய்ச்சலையும் உண்டாக்குகிறது.
எர்த்தீமியா, பைடெர்மா உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளும் குடல் புண்களின் அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன. வயிற்றுப் புண் தீவிர நிலைக்குப் போகும்போது அதன் தாக்கம் சருமத்தில் ஏற்படலாம். குடலில் அல்சர் இருக்கும்போது குடல் சுவர்களில் நாள்பட்ட ரத்தக் கசிவு இருந்து கொ்ணடே இருக்கும்.
இதன் காரணமாக இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு அனீமியா என்னும் ரத்தசோகை உண்டாகிறது. ஹீமோகுளோபின் குறையும்போது இயல்பாகலே உடல் சோர்வு, பலவீனமும் உண்டாகிறது. சிலருக்கு பெருங்குடல் அழற்சி மோசமான நிலைக்குச் செல்லும்போது சில சமயங்களில் அறுவை சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.