For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீட்டில் பணம் வைக்கின்ற இடத்தில் மறந்தும் இந்த பொருட்களை வச்சிடாதீங்க.? உடனே மாற்றிடுங்க.!

06:20 AM Nov 30, 2023 IST | 1newsnationuser4
வீட்டில் பணம்  வைக்கின்ற இடத்தில் மறந்தும் இந்த பொருட்களை வச்சிடாதீங்க   உடனே மாற்றிடுங்க
Advertisement

பணம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் பணத்திற்காகவே அல்லும் பகலும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். உழைத்த பணத்தின் மூலம் தங்கள் வாழ்க்கை உயரும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் பணம் அவர்கள் வீட்டில் தங்காது. இதற்குக் காரணம் அவர்களுக்கு பணத்தின் கடவுள் ஆன லட்சுமி தேவியின் அருள் கிடைக்காததை ஆகும்.

Advertisement

லட்சுமி தேவியின் அருள் கிடைக்காததற்கு காரணம் பணம் வைக்கும் இடத்தில் அதனுடன் சேர்த்து இருக்கும் சில பொருட்கள் தான் என வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் கணித்துக் கூறுகின்றனர். பணம் வைக்கக்கூடிய இடத்தில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது.? அவற்றை ஏன் வைக்கக்கூடாது.? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ரூபாய் நோட்டுகள் கிழிந்து போனாலும் அவற்றை நம்முடன் பாதுகாப்பாக வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இந்தக் கிழிந்த நோட்டுகள் நமது பணம் சேமிக்கும் இடத்திலோ அல்லது பீரோவில் இருக்கும்போது தேவையில்லாத செலவுகள் ஏற்படுமாம். எனவே கிழிந்த நோட்டுகள் இருந்தால் வங்கிகளில் சென்று அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் பணத்தை பாதுகாப்பாக வைக்கும் இடத்தில் எதிர்மறை பொருட்கள் இருந்தால் அவற்றால் தேவையில்லாத செலவு ஏற்பட்டு பணம் விரயமாகும்

இதனை தடுப்பதற்கு பணம் வைக்கும் இடத்தில் வில்லங்கமான பத்திரங்கள் மற்றும் எதிர்மறை பொருட்கள் இருந்தால் அவற்றை மாற்றி வேறு இடங்களில் வைக்க வேண்டும். மேலும் பணம் வைக்கும் இடத்தில் எந்த காரணம் கொண்டும் மருந்து மாத்திரைகளை வைக்க கூடாது. ஏனெனில் அவை மருத்துவச் செலவை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்து விடும் என வாஸ்து வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர் எனவே பணம் வைக்கும் இடத்தில் மருந்து மற்றும் மாத்திரைகள் இருந்தால் உடனடியாக அவற்றை இடமாற்ற வேண்டும். மேலும் பணம் வைக்கும் இடத்தில் உலோக நிறங்களில் இருக்க வேண்டும். இவற்றால் தான் நமது செல்வம் பலமடங்காக பெருகும் என வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement