முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ராமர் இல்லையென்றால் நாடே இருக்காது’..!! ’தமிழ்நாட்டில் கலாசாரம், பாரம்பரியத்தை இளைஞர்கள் இழந்துள்ளனர்’..!! ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு..!!

Governor RN Ravi's statement that 'If Ram is removed, there is no country called India' has created a sensation.
06:43 PM Sep 14, 2024 IST | Chella
Advertisement

”ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை ஆளுநர் மாளிகையில் "ஸ்ரீராமரும் தமிழகமும் இணை பிரியா பந்தம்" என்ற புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”நாடு முழுவதும் பயணித்து மக்களுடன் சிறிது நேரம் ஒதுக்கினால் தெரியும், நாட்டின் ஒவ்வொரு இஞ்ச் இடத்திலும் ராமர் இருக்கிறார்.

மக்கள் மனதில் இருந்து ராமரை எப்போதும் நீக்க முடியாது. அப்படி ஒருவேளை நீக்க முயற்சி செய்தால் பாரதம் இருக்காது. நாடும் இருக்காது. இந்த நாட்டை இணைக்கும் பசையாக ராமர் இருக்கிறார். மொழி, இனம் கடந்து ராமர் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். நாம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி ஸ்ரீராமர் தான்.

தர்மம் இல்லாமல் பாரதம் கிடையாது. சனாதன தர்மம் ஒற்றுமை குறித்து பேசுகிறது. ராமர் வடநாட்டு கடவுள் என்ற கருத்து தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டதால், இளைஞர்கள் நமது கலாசார, ஆன்மிக பாரம்பரியத்தை இழந்துள்ளனர்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Read More : கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எப்படி வங்கியில் மாற்றுவது..? கட்டணம் எவ்வளவு..? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!

Tags :
ஆளுநர் ரவிஇந்தியா
Advertisement
Next Article