வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் ஒரு காசு கூட தங்காதாம்.. இந்த பொருள் மூலம் அதை சரிசெய்யலாம்..!
ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கையின் பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு பரிகாரங்களில் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. எதிர்மறை ஆற்றலை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
சில எளிய கற்பூர பரிகாரம் மூலம் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்க வாஸ்து பரிகாரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதன் முதல் அறிகுறி பண இழப்பு. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் வீட்டில் ஒரு காசு கூட தங்காது. எதிர்பாராத செலவினங்கள் ஏதேனும் வந்து கொண்டே இருக்கும். அல்லது தொழிலில் நஷ்டம் ஏற்படும்.
உங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது நோய்களும் வாஸ்து குறைபாடுகள் காரணமாக ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. வீட்டில் செல்வ செழிப்பு பெருகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் இந்த வாஸ்து குறைபாடுகளை அகற்ற வேண்டும்.
கற்பூரத்தின் உதவியுடன் வாஸ்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எளிமையான வழி உள்ளது. ஐந்து அல்லது ஆறு கற்பூரத்தை எடுத்து மண் விளக்கில் நெய்யில் தோய்த்து எரித்தால் போதும்.
இது தவிர, உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் சிறிய கற்பூர வைக்க வேண்டும். சில நாட்களில் அவை தானாகவே மறைந்துவிடும். இந்த கற்பூரங்கள் மறைவது போலவே, உங்கள் வீட்டிலிருந்து வாஸ்து குறைபாடுகளும் மறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் நம்பிக்கைகளின்படி, தினமும் காலையில் உங்கள் வீட்டின் சமையலறையில் கற்பூரத்தை எரிக்க வேண்டும் என்று நிபுணர்kஅள் கூறுகின்றனர்.
அதே போல் வாஸ்து தோஷத்தை நீக்க கிராம்புகளை சேர்த்து எரிக்கலாம். இது தவிர, இது வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி. நோய்களின் தீய விளைவுகளிலிருந்து விடுபட உதவும். இவை எங்கள் நிபுணர் பகிர்ந்துள்ள பொதுவான வாஸ்து வைத்தியங்கள், இருப்பினும், உங்கள் ஜாதகம் மற்றும் உங்கள் வீட்டின் கட்டமைப்பின் அடிப்படையில் தனிப்பட்ட ஆலோசனைகளுக்கு, ஒரு ஜோதிடர் அல்லது வாஸ்து நிபுணரை தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.
Read More : இழந்த பணம், சொத்துக்கள் திரும்ப கிடைக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.!?