குட் நியூஸ்...! மனைவி பிரசவித்தால் கணவனுக்கு 15 நாள் விடுப்பு வழங்கப்படும்...! முழு விவரம்
மனைவியின் பிரசவத்திற்கு தந்தை வழி விடுப்பு 15 நாள் வழங்கப்படும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தந்தைவழி விடுப்பு இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட அனைத்து ஆண் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு விடுப்பு வழங்கத் தகுதியுள்ள ஒரு அதிகாரியால் தந்தைவழி விடுப்பு வழங்கப்படும். அதாவது அவரது மனைவியின் பிரசவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும். தந்தைவழி விடுப்பு வேறு எந்த வகையான விடுமுறையுடனும் இணைக்கப்படலாம்.
மேலும் தந்தைவழி விடுப்பு , விடுப்புக் கணக்கிலிருந்து பற்று வைக்கப்படாது. தந்தைவழி விடுப்பு குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பெறப்படாவிட்டால் அத்தகைய விடுப்பு காலாவதியானதாக கருதப்படும். பொதுவாக எந்த சூழ்நிலையிலும் தந்தைவழி விடுப்பு நிரகரிக்கப்படாது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண்களுக்கு விடுப்பு:
அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில் காணப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் உடல் திறன் இழத்தல் மற்றும் தேறுதல் போன்ற சிரமங்கள், மாற்று கருவறை மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேர்வதில்லை என்பதனை கருத்தில் கொண்டும், மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க ஏதுவாக தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்படுகிறது.