For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’திருமணத்திற்கு பின் மகன் இறந்துவிட்டால் தாய்க்கு சொத்தில் பங்கு கிடையாது’..!! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு..!!

05:23 PM Nov 18, 2023 IST | 1newsnationuser6
’திருமணத்திற்கு பின் மகன் இறந்துவிட்டால் தாய்க்கு சொத்தில் பங்கு கிடையாது’     சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
Advertisement

இந்திய வாரிசு உரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisement

நாகையை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012 ஆண்டில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயதான தாய் உள்ளார். இவரது பெயர் பவுலின் இருதய மேரி. இந்நிலையில், மகனின் சொத்தில் பங்கு கேட்டு தாய் பவுலின் இருதய மேரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நாகை நீதிமன்றம், மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. ஏனெனில் ,மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது. தாய்க்கு பங்கு உண்டு என்ற நாகை மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags :
Advertisement