முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”இதயம், நுரையீரல் சிறப்பாக இல்லையென்றால் மறதி வருமாம்”..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

Forgetfulness is a problem that affects not only the elderly but also the young in today's era.
11:36 AM Dec 10, 2024 IST | Chella
Advertisement

மறதி என்பது இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். மறதி வராமல் தடுப்பது எப்படி..? என்பது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உடல் ஆரோக்கியத்தைக் கையாளுவதைப் பொருத்தே மறதி ஏற்படும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Advertisement

சீனாவில் உள்ள தியான்ஜின் மருத்துவ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இதயம், நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் மறதிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில், இதய செயல்பாடுகள் நன்றாக உள்ளவர்கள் அறிவாற்றலில் சிறந்து விளங்குகிறார்கள், அவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதி நோய் வருவதற்கான அபாயம் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

இதய சுவாச உடற்பயிற்சி

உடல் செயல்பாடுகளின்போது தசைகளுக்கு எந்தளவுக்கு ஆக்ஸிஜனை வழங்க முடியும் என்பதே இதய சுவாச உடற்பயிற்சி. இது சிறப்பாக இருப்பவர்களுக்கு மற்றும் இதயம், நுரையீரல் செயல்பாடுகள் சரியாக இருபவர்களுக்கு மறதி ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறதாம். இருப்பினும், 70 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னெஸ் 20% குறைவதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயது முதல் 70 வயதுடைய 61,000 பேரிடம் 12 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு பைக்கில் சுமார் 6 நிமிட உடற்பயிற்சி சோதனை செய்யப்பட்டது. அதேபோல் அவர்களின் நினைவுத்திறன், அறிவாற்றலும் சோதிக்கப்பட்டது. இதில், கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னஸ் அதிகம் உள்ளவர்கள் அறிவாற்றல் சோதனைகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

ஆய்வு மேற்கொண்ட 12 ஆண்டுகளில் 533 பேருக்கு மறதி நோய் ஏற்பட்டது. கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னஸ் உள்ளவர்களுக்கு மறதியை உருவாக்கும் அபாயம் 40% குறைவு. இது மறதி ஏற்படுவதை 1.5 ஆண்டுகள் தாமதப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மறதி நோய்க்கான மரபணு ஆபத்துக் காரணிகள் இருந்தாலும் கூட, இதயம், நுரையீரல் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளவர்களுக்கு மறதி தள்ளிப்போகலாம். உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது மறதிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read More : “இதை கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்லை”..!! ”யாரும் பிரச்சாரத்துக்கு போகாதீங்க”..!! வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்..!!

Tags :
ஆராய்ச்சியாளர்கள்இதயம்உடற்பயிற்சிநுரையீரல்மறதி
Advertisement
Next Article