இந்த புகாரில் சிக்கினால் இனி ரேஷன் கடை ஊழியர்கள் நிரந்த பணிநீக்கம்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!
பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 35,941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மலிவு விலையில் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கடைகளில் ஆய்வுக்கு செல்லும்போது அடிக்கடி புகாருக்கு உள்ளாகும் ரேஷன் கடை ஊழியர்களின் விவரம் அடங்கிய பட்டியல் தயாரித்து, அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், முறைகேடுகளுக்கு துணைப்போகும் ரேஷன் கடை ஊழியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
Read More : உடல் அழகையே கெடுக்கும் தொப்பை..!! விரைவில் குறைப்பது எப்படி..? சூப்பர் டிப்ஸ்..!!