இட்லி, தோசை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா..? விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!
உலகின் பல்லுயிர் தன்மையை பாதிக்கும் உணவுகள் பட்டியலில் இட்லி, தோசை இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பிரபலமான 151 உணவு வகைகளைத் தேர்வு செய்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், உலகின் பல்லுயிர்தன்மையை மனிதர்களின் உணவுப்பழக்கங்கள் வெகுவாகப் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர். உண்ணும் உணவு எப்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு பல காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.
பொதுவாக இறைச்சி உண்ணுவதால் அதிக பல்லுயிர்த்தன்மை பாதிப்பு ஏற்படுகிறது. மாடு போன்ற விலங்குகளை வெட்டும்போது வெளியாகும் வளிமண்டல மீத்தேன்கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். ஒரு உணவை உற்பத்தி செய்ய அழிக்கப்படும் பறவை மற்றும் பூச்சியினங்களும் பல்லுயிர்தன்மையைப் பாதிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதனடிப்படையில், ஒரு உணவைத் தயாரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் இட்லியும், 7-வது இடத்தில் ராஜ்மாவும், 20ஆவது இடத்தில் தாலும், 22ஆவது இடத்தில் சன்னா மசாலாவும், 96ஆவது இடத்தில் ஆலு பரோட்டாவும், 103ஆவது இடத்தில் தோசையும் இடம்பெற்றுள்ளன.
ஆச்சரியப்படும் விதமாக உருளைக்கிழங்கு பொரியலான ப்ரெஞ் பிரைஸ் (French fries) கடைசி இடத்தைப் பெற்று உலகின் பல்லுயிர் தன்மைக்கு குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் உணவாக இடம்பெற்றுள்ளது.
Read More : காஷ்மீரில் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..!! ராணுவ வீரர் வீர மரணம்..!!