For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஐஏஎஸ், ஐபிஎஸ் தீர்வுகள்.! 'UPSC' வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி எப்போது.?

01:57 PM Feb 19, 2024 IST | 1newsnationuser4
ஐஏஎஸ்  ஐபிஎஸ் தீர்வுகள்    upsc  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு   விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி எப்போது
Advertisement

இந்தியாவில் இருக்கும் அரசு பணிகளில் முதன்மையானவையாக கருதப்படுவது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் பணிகளாகும். இந்தப் பணிகள் குடிமைப் பணிகள் என அழைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான தேர்வுகள் யூபிஎஸ்சி என்று அழைக்கப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இவற்றிற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தரவரிசையின் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

Advertisement

இந்த வருடத்திற்கான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் நிலை தேர்வு மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 21 வகையான சிவில் சர்வீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் தற்போது நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளுக்காக விண்ணப்பிக்கும் முறை கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம் .

யுபிஎஸ்இ நடத்தும் குடிமைப் பணியை தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு பிடித்திருக்க வேண்டும். மேலும் அவர்களது குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது .

விண்ணப்ப கட்டணம்: யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், விதவைகள் உள்ளிட்டோர் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsconline.nic.in/upsc/OTRP/ சென்று தேர்வு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம். தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தேர்வு குறித்த முழு விவரங்களையும் படித்து தெரிந்த பின்பு தங்களது விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலமாக 14.02.2024 முதல் 05. 03. 2024 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றிற்கான முதல் நிலை தேர்வு 26.05.2024 அன்று நடத்தப்படும் என பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்து இருக்கிறது.

English summary: UPSC announces dates for civil service exams for the year 2024-25.

Read more: ‘INDIA’ கூட்டணி வாரிசு அரசியலின் கூடாரம்.! – உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் தாக்குதல்.! – 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News

Tags :
Advertisement