For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

“இந்தியாவுக்காக அந்த 2 கோப்பை ஜெயிக்காம ஓய்வு எடுக்க மாட்டேன்!!" – ரோகித் சர்மா 

07:00 PM Apr 12, 2024 IST | Mari Thangam
“இந்தியாவுக்காக அந்த 2 கோப்பை ஜெயிக்காம ஓய்வு எடுக்க மாட்டேன்    – ரோகித் சர்மா 
Advertisement

50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும், அதுவரை ஓய்வு பெறுவது குறித்து நான் யோசிக்கவில்லை என ரோகித் சர்மா தெரிவித்தார்.

Advertisement

டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பிளேயராக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுவரை மும்பை அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் அதிரடி தொடக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடிய அவர், 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

மேலும் விரைவில் 37 வயதை தொடும் ரோகித் சர்மா இன்னும் ஓரிரு வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியாவுக்காக வெற்றி காண்பதே தம்முடைய லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடைபெற உள்ளது. அதற்கு இந்தியா தகுதி பெறும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை 50 ஓவர் உலகக் கோப்பை தான் உண்மையான உலகக் கோப்பை. அதைப் பார்த்தே நாங்கள் வளர்ந்தோம். சென்ற முறை அது எங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்றது. அதில் நாங்கள் ஃபைனல் வரை நன்றாக விளையாடினோம்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.  இறுதிப்போட்டிக்கு முன்பு வரை நாங்கள் நன்றாக விளையாடினோம்.  அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவுடன் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் போதும் என நினைத்தேன்.  இறுதிப்போட்டி எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது.

இறுதிபோட்டிக்கு முன்பு வரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது.  அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். அந்த நாள் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான நாளாக அமைந்துவிட்டது.  இறுதிப்போட்டியில் நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கவில்லை.”

Tags :
Advertisement