முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இதை மட்டும் நான் எப்போதும் விடமாட்டேன்!… மீண்டும் கோலியை சீண்டிய கம்பீர்!… அடுத்து என்ன நடக்கப்போகுதோ?

10:40 AM Dec 09, 2023 IST | 1newsnationuser3
Advertisement

20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளை இந்தியா வென்றபோது, அணியில் இருந்த கௌதம் காம்பீரை சுற்றி எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. கிரிக்கெட் களத்திலும் சரி, வெளியிலும் சரி ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிக்கும் அவர், எதிராளிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என நொடிநொடிக்கு சிந்தித்துக் கொண்டே இருப்பார். கிரிக்கெட் களத்தில் பல முறை சண்டையிட்டிருக்கும் காம்பீர் ஒருமுறை கம்ரான் அக்மலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரையும் தோனி தலையிட்டு சமாதானப்படுத்தினார்.

Advertisement

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியின் போது, கௌதம் கம்பீர், ஷாகித் அப்ரிடியுடன் கடும் தகராறில் ஈடுபட்டார். சிங்கிள் ஓட்டும் போது அவருடன் மோதினார். இதனால் இருவரும் காரசாரமாக வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். 2013 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய காம்பீர், ஆர்பிசி அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியுடன் கடும் சொற்களை கொண்டு வாக்குவாதம் செய்தார். இந்த சண்டை பெரும் பிரச்சனையாக மாறியது.

இதேபோல் மற்றொரு ஐபிஎல் போட்டியின்போது நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி வாக்குவாதம் செய்து கொண்டனர். போட்டிக்குப் பிறகு காம்பீர் அதற்கு விராட் கோலியுடன் வாக்குவாதம் செய்தார். இது ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை வரை சென்றது. இந்தநிலையில் இந்த மோதல் குறித்து 7 மாதத்திற்கு பிறகு கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.

எனது வீரர்களிடம் யாரும் தவறாகப் பேசி நடக்க முடியாது. ஒரு மென்டராக நான் விடமாட்டேன். எனக்கு எப்பொழுதும் வித்தியாசமான ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆட்டம் முடியும் வரை நான் எந்த விஷயத்திலும் தலையிட மாட்டேன். ஆட்டம் முடிந்த பின்னும் எங்கள் வீரர்களுக்கு எதிராக யாராவது காரசாரமான விவாதத்தில் இறங்கினால், அவர்களைப் பாதுகாக்கும் அனைத்து உரிமைகளும் எனக்கு இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

Tags :
7 மாதத்திற்கு பிறகுGambhirViratகோலி - கம்பீர் மோதல்விளக்கம்
Advertisement
Next Article