’செருப்பால அடிப்பேன்’..!! விக்ரமை ஆவேசமாக திட்டிய பூர்ணிமா..!! பரபரப்பு வீடியோ..!!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் இடையே, பல்வேறு சண்டைகள், குழப்பங்கள், காதல், போட்டி, பொறாமை என தொடர்ந்தாலும், சில நேரங்களில் அவைகளும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுக் கொண்டு தான் உள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலுள்ள சரவண விக்ரமை செருப்பால் அடிப்பேன் என சொல்லுகிறார் பூர்ணிமா. தற்போது குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
அதன்படி, பிக்பாஸ் வீட்டில் டிசேர்ட்டுகளை எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்த பூர்ணிமா, மாயா, நிக்சன் ஆகியோர் இருக்கும் இடத்திற்கு வந்த விக்ரம், பூர்ணிமாவிடம் ஏதோ சொல்ல, பதிலுக்கு செருப்பால் அடிப்பன் என பூர்ணிமா சொல்லுகிறார். இதை தொடர்ந்து, விக்ரம் திரும்பிச் செல்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்த வாரம் விக்ரம் தான் வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு காரணம், பிக்பாஸ் வீட்டில் முதுகுத்தண்டு இல்லாமல் விக்ரம் இருப்பது தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.