For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன்"..!! ”சும்மா விட மாட்டேன்”..!! டிஐஜி வருண்குமார் எச்சரிக்கை..!!

DIG Varunkumar has said that even if Seeman apologizes, he will not accept it.
11:56 AM Dec 31, 2024 IST | Chella
 சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன்      ”சும்மா விட மாட்டேன்”     டிஐஜி வருண்குமார் எச்சரிக்கை
Advertisement

சீமான் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது என டிஐஜி வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி முன்னாள் எஸ்.பி.யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார், நாம் தமிழர் கட்சியினர் தனது குடும்பத்தினரை சமூக வலைதளங்களில் அவதூறு பேசுவதாக சீமான் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில், "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே, சீமான் தனக்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அருண்குமார், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்க தொழிலதிபர் மூலம் தூது விட்டார். ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

பொது வெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால், நீதிமன்றத்தில் அதை தெரிவிக்கப்படும். இனிமேல் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். மேலும், சிவில் வழக்கு ஒன்றும் தொடர உள்ளேன். சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

Read More : செல்வமகள் சேமிப்பு திட்டம் முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு வரை..!! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..!!

Tags :
Advertisement