”பெரியார் சிலையை உடைப்பேன்”..!! ஹெச்.ராஜா குற்றவாளி..!! சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
பெரியார் சிலை விவகாரத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல், தமிழ்நாட்டிலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று கடந்த 2018ஆம் ஆம் ஆண்டு ஹெச்.ராஜா தெரிவித்திருந்தார். எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்றும் ஹெச்.ராஜா கூறியிருந்தார்.
இந்நிலையில், பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றப்பட்டது. இந்நிலையில் தான், பெரியார் சிலைகளை உடைப்பதாக கூறியது, கனிமொழி குறித்து எதிராக விமர்சனம் உள்ளிட்ட இரு வழக்குகளில் ஹெச்.ராஜா குற்றவாளி என எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.