”என் மீது யார் சேற்றை வீசினார்கள் என்பது தெரியும்”..!! ”இதை அரசியலாக்க விரும்பவில்லை”..!! அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேட்டி..!!
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தப் பின் அமைச்சர் பொன்முடி நேற்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ”விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 செமீ, விழுப்புரம் நகரில் 63.5 செமீ மழை பெய்துள்ளது. 67 நிவாரண முகாம்களில் 4,906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 70% மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கனமழையால் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம் 2 அடி உயர்த்தப்பட உள்ளது. இதன்மூலம் வரும் காலங்களில் தண்ணீர் தேங்காத அளவுக்கு திட்டமிடப்படும்.
என் பின்புறம் சேற்றை வீசி அரசியல் ஆக்குவதற்காக செய்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் யார் பதிவிட்டுள்ளாரோ அவர் கட்சியை சார்ந்தவர்கள் என்பது உங்களுக்கே தெரியும். என் மீது மட்டுமல்ல.. என்னுடன் வந்த ஆட்சியர் உள்ளிட்டோர் மீது சேறு பட்டுள்ளது. இதனை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.