For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”எனக்கு உன்னைவிட அவனைதான் பிடிச்சிருக்கு”..!! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக் கட்டிய மனைவி..!!

Furious, he reprimanded his wife several times. But despite that, the two of them often had sex.
10:22 AM Dec 30, 2024 IST | Chella
”எனக்கு உன்னைவிட அவனைதான் பிடிச்சிருக்கு”     கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக் கட்டிய மனைவி
Advertisement

திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள குருவிகுளம் வனப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். aதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

மேலும், சடலத்தின் அருகே இரண்டு மதுபாட்டில்கள் கிடந்ததால் அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் காளாணம்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து (54) என்பது தெரியவந்தது.

கூலித் தொழிலாளியான இவருக்கு காளியம்மாள் என்ற 45 வயது மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கிருபாகரன் என்பவருக்கும் நாச்சிமுத்து மனைவி காளியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் நாச்சிமுத்துவுக்கு இவர்களது உறவு தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர், மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அதையும் மீறி இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்ய மனைவி முடிவு செய்துள்ளார். அதன்படி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்க்க நாச்சிமுத்து, காளியம்மாள் ஆகியோர் சென்றுள்ளனர். இத்தகவலை காளியம்மாள் கிருபாகரனிடம் தெரிவித்தார். இதையடுத்து, நாச்சிமுத்துவை மது அருந்தலாம் என்று கூறி கிருபாகரன் மாமுகோவிலூர் பிரிவு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

நாச்சிமுத்து போதையில் இருந்தபோது, ​​தான் மறைத்து வைத்திருந்த கட்டையால் தலையில் தாக்கிக் கொன்று விட்டு கிருபாகரன் தப்பியோடினார். நாச்சிமுத்துவின் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : Jan 2025 Bank Holidays | ஜனவரி 1ஆம் தேதி வங்கிகள் இயங்குமா..? வாடிக்கையாளர்களே கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement