For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கிளம்பியது சர்ச்சை..! "மோடியின் 11 நாள் விரதத்தில் சந்தேகம் இருக்கிறது.." முன்னாள் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

05:04 PM Jan 25, 2024 IST | 1newsnationuser7
கிளம்பியது சர்ச்சை     மோடியின் 11 நாள் விரதத்தில் சந்தேகம் இருக்கிறது    முன்னாள் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு
Advertisement

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22 ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வுகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முன் நின்று குழந்தை ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளுக்காக 11 நாட்கள் கடுமையான விரதம் இருந்த அவர் கட்டிலில் வெறும் போர்வையுடன் படுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்ததும் அர்ச்சகர் புனித தீர்த்தம் கொடுக்க அதனை குடித்து தனது விரதத்தை முடித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் விரதம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கும் அவர் "நரேந்திர மோடியின் விரதம் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக என்னுடைய மருத்துவரிடம் பேசினேன். அவர் 11 நாட்கள் ஒருவரால் விரதம் இருக்க முடியாது என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்வுக்காக மோடி 11 நாட்கள் விரதம் இருந்ததில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஒருவர் விரதம் இருக்காமல் கருவறைக்குள் நுழைவது சாஸ்திரங்களுக்கு எதிரானது" எனவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த கருத்துக்கள் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது .

Tags :
Advertisement