For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'சொந்தமா ஒரு வீடு கூட இல்லை'… பொய் சொன்னாரா மோடி? … பேசுபொருளாகும் 2019 தேர்தல் வேட்பு மனு..!!

07:30 AM May 05, 2024 IST | Baskar
 சொந்தமா ஒரு வீடு கூட இல்லை … பொய் சொன்னாரா மோடி  … பேசுபொருளாகும் 2019 தேர்தல் வேட்பு மனு
Advertisement

"எனக்கு சொந்தமாக வீடு ஒரு சைக்கிள் கூட இல்லை" என்று ஜார்க்கண்ட் மாநில பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளது விவாதப்பொருளாகியுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணி என இரு அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஜார்க்கண்ட்டில் தீவிரமடைந்துள்ளது. ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கல்பனா சோரன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி "மக்கள் அனைவரும் தங்கள் வாக்கின் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து ஊழல் செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுத்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

எனக்கு சொந்தமாக ஒரு வீடு, சைக்கிள் கூட இல்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வாரிசுகளுக்காக ஊழல் செய்து பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர். நீங்கள் அனைவரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் பேரக் குழந்தைகளும் தான் என் வாரிசுகள். அவர்களுக்கு வளமான இந்தியாவை கட்டியெழுப்பி அளிப்பதே என் இலக்கு. கடந்த 25 ஆண்டுகளில் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு ஆபத்தான விஷயத்தை கூறியுள்ளனர். இவர்கள் இப்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பறிக்க நினைக்கிறார்கள். நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது,​​இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று முடிவு செய்திருந்தனர். இப்போது காங்கிரஸ் கட்சி பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் இடஒதுக்கீட்டை கொள்ளையடித்து, மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க நினைக்கிறது" என விமர்சித்துப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

இந்த நிலையில் தனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை என ஜார்க்கண்ட் கூட்டத்தில் பிரதமர் பேசியுள்ளார். ஆனால், கடந்த 2019 லோக்சபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரூ. 1.10 கோடி மதிப்பில் சொந்த வீடு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More: HEAT WAVE: அதிகரித்து வரும் மூளை பக்கவாதம் நோய்..! மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Advertisement