PM MODI | "நான் வேற மாறி", "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக வேகமாக ஓடுகிறேன்" அசம்கர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி.!
PM MODI: இந்தியாவின் வளர்ச்சிக்காக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறேன் என பிரதமர் மோடி அசம்கர் நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேச மாநிலம் அசம்கரில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த விழாவில் பேசிய அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கினார். பாரதிய ஜனதா(BJP) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நான் ஒரு இடங்களுக்கு மேல் கைப்பற்றி வெற்றி பெறுவதற்கு சங்கர் மக்கள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி(PM MODI) " நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் ஐஐஎம்எஸ் மற்றும் எய்ம்ஸ் போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தேர்தல் நேரம் என்பதால் இது போன்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த 30 முதல் 35 வருடங்களாக மக்களை இவ்வாறு தான் ஏமாற்றி இருக்கிறார்கள்.
2019-ல் போட்ட திட்டங்களை இப்போது நிறைவேற்றுகிறேன். 2024 இல் மக்களின் வளர்ச்சி பணிக்காக கொண்டுவரும் திட்டங்களை தேர்தல் லென்ஸ் கொண்டு பார்க்கக் கூடாது. இது நாட்டின் வளர்ச்சிக்கான எனது பிரச்சாரம். 20047-இல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே எனது நோக்கம். அதற்காக பாடுபட்டு வருகிறேன் என தெரிவித்தார். நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்த வேண்டும் என்று வேகமாக இயங்கி வருகிறேன் எனவும் கூறினார். மேலும் மற்ற பிரதமர்களை போல் அல்லாமல் நான் வேறு மாதிரி எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.
அசம்கர் நவீன வளர்ச்சியின் கோட்டையாக இருக்கும் என உத்தரவாதம் தருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் அசம்கர் நகரில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டதையும் வெகுவாக பாராட்டினார். ஒரு காலத்தில் மாபியா கும்பல்களின் கோட்டையாக விளங்கிய அசம்கர் இன்று சட்டம் ஒழுங்கை கடைபிடித்து வேகமாக முன்னேற்றங்களை கண்டிருக்கிறது எனவும் பாராட்டினார்.
மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ள விஷம் வலுவிழந்து வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி எதிர்க்கட்சியினர் எனக்கு குடும்பம் இல்லை என கூறி வருகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த நாடும் மோடியின் குடும்பம் என்பதை மறந்து விடுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் உத்திர பிரதேசத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளையும் பாரதிய ஜனதா கட்சி வெல்வதற்கு அசம்கர் மக்கள் பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.