முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'விஜயகாந்தின் கோபத்திற்கு நான் ரசிகன்’..!! ’நேர்மையானவரை இழந்திருப்பது ஒருவித தனிமை'..!! கமல்ஹாசன் உருக்கம்..!!

01:55 PM Dec 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை இவ்வாறு அத்தனை வார்த்தைகளும் சேர்த்து ஒரே மனிதரை சொல்ல வேண்டும் என்றால் அது விஜயகாந்தை சொல்லலாம். அவர் நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன்பு அவர் எப்படி பழகினாரோ, அதேபோல் இறுதி வரை என்னிடம் பழகினார். எந்த அளவிற்கு அவரிடம் பணிவு இருக்கிறதோ, அதே அளவு நியாயமான கோபமும் இருக்கும்.

அவரது கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் அவர் மக்கள் பணிக்கே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட நேர்மையானவர்களை இழந்திருப்பது ஒருவித தனிமை தான் என்னை போன்றவர்களுக்கு. இவரை போன்றவர்கள், இவர்களது ரசிகர்களை இவர்கள் போலவே உருவாக்கியிருப்பார்கள்” என்று பேசினார்.

Tags :
அஞ்சலிசென்னைதீவுத்திடல்தேமுதிக தலைவர் விஜயகாந்த்நடிகர் கமல்ஹாசன்விஜயகாந்த்
Advertisement
Next Article